பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனர் சரணின் தம்பியுமான குகன் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம், இனிது இனிது. பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் படத்தை தயாரிக்கிறது.
தெலுங்கில் தமன்னா நடித்த ஹேப்பி டேஸ் படமே தமிழில் இனிது இனிது என்ற பெயரில் தயாராகி வருகிறது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். கேம்பஸ் கதையான இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் நடத்தப்பட்டது.
படத்தின் டாக்கி போர்ஷன் முழுவதும் முடிந்த நிலையில், எடிட்டிங் மற்றும் டப்பிங் பணிகளில் பிஸியாக இருக்கிறார் குகன். படத்தில் இனி முடிக்க வேண்டியது ஒரேயொரு பாடல் காட்சி மட்டுமே. போஸ்ட் புரொடக்சன் வேலைகள் முடிந்தபின் பாடலை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.