கமல் படத்தில் பிருத்விராஜ்

வெள்ளி, 15 மே 2009 (16:12 IST)
மணிரத்னத்தின் ராவண் படத்தில் நடித்துவரும் பிருத்விராஜ் அடுத்து கமலுடன் நடிக்கிறார்.

பரத்பாலா இயக்கத்தில் பல மொழிகளில் பிரமாண்டமாக தயாராக இருக்கிறது 19 ஸ்டெப்ஸ். கமல் களரி ஆசானாக இதில் நடிக்கிறார். இளவரசியாக அசின். அவரை காதலிக்கும் இளைஞனாக ஜப்பான் நாட்டின் முன்னணி நடிகர் அறிமுகமாகிறார்.

எம்.டி. வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதும் இந்தப் படத்தின் கதை கேரளாவை பின்னணியாகக் கொண்டது. சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலகட்டம். கதைக்களம் கேரளா என்பதால் பெரும்பாலான நடிகர்களை அங்கிருந்தே தேர்வு செய்துள்ளனர்.

மணிரத்னம் படத்தில் நடித்து வரும் பிருத்விராஜ் 19 ஸ்டெப்சில் கமலுடன் நடிக்கிறார். அவரது கேரக்டர் என்ன என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்