அசோக்கின் வானம் பார்த்த சீமையிலே

வியாழன், 14 மே 2009 (19:56 IST)
கார்ப்பரேட் கம்பெனிகள் கலகலத்துப் போன நிலையில், தமிழ் சினிமாவை வாழ வைத்துக் கொண்டிருப்பவை சிறு தயாரிப்பு நிறுவனங்கள். குறைந்த முதலீட்டில் தயாரான வெண்ணிலா கபடிகுழு, பசங்க படங்களின் வெற்றி சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களை ஊக்குவித்திருக்கிறது.

நல்ல கதை, திறமையான டெக்னீஷியன், குறைந்த முதலீடு என்ற மினிமம் கியாரண்டி பார்முலாவில் தயாராகும் படம் வானம் பார்த்த சீமையிலே.

அசோக், பிரியங்கா என அவ்வளவு பிரபலமாகாத நடிகர்கள். ஆகவே, நடிகர்களின் சம்பள பட்ஜெட்டும் குறைவு. திண்டுக்கல்லைச் சேர்ந்த வானவராயர் தயாரிப்பு.

கே. மணிபாலன் படத்தை இயக்குகிறார். கதை விவாதம் முடிந்து, ஸ்கிரிப்டும் தயார். லொகேஷன் முடிவு செய்து நிதானமாக ஜூலையில் படப்பிடிப்புக்கு கிளம்புகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்