ஓவியர் ரவிவர்மா வாழ்க்கை திரைப்படமாகிறது

சனி, 28 பிப்ரவரி 2009 (15:24 IST)
புகழ்பெற்ற ஓவியரான ராஜா ரவிவர்மாவின் வாழ்க்கை வரலாறு திரை‌ப்படமாகிறது. ரவிவர்மாவின் பேரன் அஜய்வர்மா தனது தாத்தாவின் வாழ்க்கையை சினிமாகவே எடுக்கிறார்.

படத்துக்கு இசை மேஸ்ட்ரோ இளையராஜா. ஆஸ்கர் விருதின் மூலம் ஒலிக்கும் 'ஜெய் ஹோ' பாடலை எழுதிய பாடலாசிரியர் குல்சார், இளையராஜா இசையில் பாடல்களை எழுதுகிறார்.

சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் பாலுமகேந்திரா இந்தி‌யில் இயக்கிய 'சத்மா'வுக்கு (மூன்றாம் பிறை) பிறகு இளையராஜா-குல்சார் ஜோடி இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.

புகழ் வாய்ந்த ஓவியங்களை தனது தூரிகையால் தந்து கலைக்கு பெருமை சேர்த்த ஓவியர் ராஜா ரவிவர்மா பற்றிய இந்த செல்லுலாய்ட் பதிவு திரை வரலாற்றில் ஒரு ஆக்கப்பூர்வ, கலைப் பதிவாக அமைய வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணம்.

வெப்துனியாவைப் படிக்கவும்