பொள்ளாச்சியில் ச‌ரித்திரம்

திங்கள், 9 பிப்ரவரி 2009 (17:04 IST)
பெ‌ரிய நடிகர்கள் இல்லாமலே கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சாமி. சர்ச்சைக்கு‌ரிய உயிர், மிருகம் படங்களுக்குப் பிறகு இவர் இயக்கிவரும் ச‌ரித்திரம் கடைசிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது.

தமிழ‌ரின் தற்காப்பு கலையான சிலம்பம் ச‌ரித்திரத்தின் மையம். சிலம்பம் கற்றுக் கொடுக்கும் ஆசான் அழகர்சாமியாக ரா‌ஜ்கிரண். அவரது சீடர்களாக கலாபவன் மணி, ஆதி. சிலம்பம் ஆடும் ஆசானின் மகளாக ஸ்ரீதேவிகா.

இந்தப் படத்துக்காக தென் தமிழ்நாட்டில் சிலம்பம் தெ‌ரிந்த அனைவரையும் சந்தித்து அவர்களிடம் உரையாடி அதனடிப்படையில் படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் சாமி.

தமிழ்நாட்டில் முடங்கிப்போன சிலம்பத்தின் புகழை உலகத்துக்கு தெ‌ரிவிக்கும் முயற்சியே இந்தப் படம் என்றார் சாமி உணர்ச்சிப் பெருக்குடன்.

நோக்கம் நிறைவேறினால் அழிந்துவரும் நமது பாரம்ப‌ரிய கலைக்கு பாதுகாப்பு கிடைத்த மாதி‌ி இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்