பசுபதிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு அவரைப் போல கிடைத்திருக்கும் திறமையான நடிகர், டேனியல் பாலாஜி. வில்லன் வேடங்களிலிருந்து கதாநாயகனாக பிரமோஷனாகியிருக்கும் இவர் தற்போது முத்திரைப் படத்தில் லட்சுமி ராயுடன் நடித்து வருகிறார்.
மலையாளத்திலிருந்தும் இவருக்கு அழைப்புகள் வருகின்றன. தொடர்ந்து மலையாளத்தில் நடிப்பாரா என்பது கேள்விக்குறி. காரணம் தமிழில் வந்து கொண்டிருக்கும் வாய்ப்புகள்.
முத்திரைக்குப் பிறகு தாய் என்ற படத்தில் நடிக்கிறார் டேனியல். மாதவதாஸ் இயக்கும் இந்தப் படத்தில் இவர்தான் நாயகன். நாயகி மலையாள வரவான சாரா. படத்தின் பெயருக்கேற்ப தாயை மையமாக வைத்து படம் தயாராகிறது.
முக்கியமான அம்மா பாத்திரத்தில் சுமலதாவை நடிக்க வைப்பதா இல்லை முன்னாள் நாயகி ரூபிணியை நடிக்க வைப்பதா என சர்ச்சை நடந்து வருகிறது. டேனியலுடன் தாயில் கஞ்சா கருப்பும் நடிக்கிறார்.