களத்தில் கருணாஸ் மகன்

திங்கள், 9 பிப்ரவரி 2009 (17:00 IST)
களம் என்றதும் ஏதோ போர்முனை என்று பதறாதீர்கள். இது திரைக்களம்.

கருணாஸ் மேடைப் பாடகராக இருந்து நடிகரானவர். அவரது மனைவி மேடைப் பாடகியாக இருந்து பின்னணி பாடகியானவர். ராஜாதிராஜாவில் இசையமைப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் கருணாஸ். குடும்பமே திரைத்துறையில் இருக்கும் போது குழந்தைகளைப் பற்றி சொல்லவா வேண்டும்.

புஷ்பா கார்டனில் ராஜாதிராஜபடப்பிடிப்பு நடந்தபோது துறுதுறுவென ஒரு சிறுவன் ஓடியாடிக் கொண்டிருந்தான். உ‌ரிமையாக அவன் லாரன்ஸின் மடியில் அமர்ந்ததைப் பார்த்தவர்களுக்கு ஆச்ச‌ரியம். யார்யா இந்தப் பொடியன்?

விசா‌ரித்தால், அது கருணாஸின் மகன். ராஜாதிராஜாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறானாம். வளர்ந்தால் எப்படியும் இங்கதான் வரப்போகிறான் என்று இப்போதே சினிமாவில் சேர்த்துவிட்டிருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்