பிரசவ நேரத்தைப் போலதான் படத்தின் ரிலீஸும். எப்படி கணித்தாலும் காலம் நேரம் கடைசி நிமிடத்தில் தள்ளிப் போய்விடும்.
சுந்தர் சி. நடிப்பில் பெருமாள், தீ இரண்டு படங்கள் இந்த மாதம் வெளியாகிறது. இரண்டு படங்களுக்கும் இடையில் போதிய இடைவெளி வேண்டும் என்பதற்காக பெருமாளை 7ம் தேதி வெளியிடுவதாக திட்டம். அறிவிப்பும் செய்தார்கள்.
ஆனால், கடைசி நேரத்தில் திரையரங்கு கிடைப்பதில் பிரச்சனையாக 13ம் தேதிக்கு பட ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. வின்சென்ட் செல்வா படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்ரீகாந்த்தேவா இசை. நமீதா, விவேக் இருவரும் படத்தின் இரு எக்ஸ்ட்ரா அட்ராக்சன்.
13ம் தேதி கண்டிப்பாக பெருமாள் ஏமாற்ற மாட்டார் என நம்பலாம்.