படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு முன்பணமாக ரூ.15 லட்சம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நயன்தாராவிடம் சம்பளத்தை குறைத்துக் கொள்ளும்படி தயாரிப்பாளர் சுபாஸ் சந்திரபோஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு நயன்தாரா ஒப்புக்கொள்ளவில்லை.
இந்த பிரச்சனையில் கால்ஷீட் தேதிகள் கிழிந்து கொண்டே வந்ததால் நயன்தாரா ஒரு சந்தர்ப்பத்தில் கொடுத்த கால்ஷீட் தேதிகள் முடிந்து விட்டது. அதனால் இனி நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.
இந்த நிலையில் வாங்கிய முன்பணத்தை நயன்தாரா திருப்பித் தர வேண்டும் என்று சுபாஸ் சந்திரபோஸ், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் தென்னிந்திய நடிகர் சங்கமும் இணைந்து கூட்டு கலந்தாய்வு கூட்டத்தில், முன்பணத்தை கொடுக்காத நடிகை நயன்தாராவை யாரும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தயாரிபாளர்களுடனான பேச்சுவார்த்தையில் நயன்தாரா முன்பணத்தை கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுவிட்டது.