மர்ம பிரதேசமாக மாறியிருக்கிறார் கமல்ஹாசன். அடுத்தப் படம் தலைவன் இருக்கின்றான் என்ற ஒற்றைத் தகவல் மட்டுமே தெரியும். பிற விஷயங்கள்? மை போட்டுத்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
மர்மத்தை உடைப்பதுதானே நமது வேலை. இதோ தலைவன் இருக்கின்றான் பற்றி சில தகவல்கள்.
தமிழ், மலையாளம் இரு மொழிகளில் படம் தயாராக இருக்கிறதாம். கமலுடன் மோகன்லாலும் நடிக்கிறார். இந்தியில் வெளியான தி வெனெஸ்டே படத்தின் மேக் என்பது நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கும் சேதி.
இறுதியாக கமல் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. வரும் இருபத்தைந்தாம் தேதி படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.