சின்னச் சின்ன வேடங்களில் நடித்துவந்த ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஹீரோவாக நடித்த முதல் படம், சற்றுமுன் கிடைத்த தகவல். படத்தின் ரிலீஸ் அன்று கோடம்பாக்கத்தை வாழ்த்து போஸ்டர்களால் நிறைத்து விட்டனர் அவரது சிஷ்யர்கள்.
விரைவில் அவர்கள் மேலுமொரு வாழ்த்துப் போஸ்டர் ஒட்ட வேண்டி வரலாம். ஆம், மாஸ்டர் மீண்டும் ஹீரோவாகிறார்.
சற்றுமுன் கிடைத்த தகவல் படத்தை இயக்கிய புவனை கண்ணனின் அடுத்த படம் சங்கரன்கோயில். கதைவேறு, களம்வேறு. ஹீரோ அதே கனல் கண்ணன். ஹேமாவதி கண்ணன் தயாரிக்கிறார். அதாவது மாஸ்டரின் சொந்த தயாரிப்பு. முதல் படத்தைப் போலில்லாமல் இது முழு நீள ஆக்ஷன் கதையாம்.