சங்கர் எசன் லாய் இந்தியில் முன்னணி இசையமைப்பாளர்கள். இவர்களின் முதல் தமிழ்ப் படம் கமலின் ஆளவந்தான்.
படம் வெற்றிபெறாததால் படத்தில் இடம்பெற்ற இவர்களின் இசையும் கண்டு கொள்ளாமல் விடப்பட்டது. ஆனால், இந்தமுறை அப்படி நடக்காது என்ற நம்பிக்கையில் உள்ளது இந்த மூவர் அணி.
கரிக்ரம் கே.குமான் யாவரும் நலம் படத்துக்கு சங்கர் எசன் லாய் இசையமைத்துள்ளனர். க்ரைம் தில்லரான இதன் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்களாம். படம் மார்ச் ஆறாம் தேதி வெளியாகிறது.
இந்த மாதம் படத்தின் பாடல்கள் வெளியாகின்றன. க்ரைம் திரில்லருக்கு பாடல்கள் முக்கியமில்லை என்ற பழைய கோட்பாடை உடைப்பதுபோல் இருக்குமாம் யாவரும் நலத்தின் பாடல்கள். இரண்டு நாட்களில் இசை வெளியீட்டு தேதியை அறிவிக்க இருக்கிறார்கள்.