நான் கடவுள் ஓபனிங்

சனி, 7 பிப்ரவரி 2009 (15:13 IST)
பல வருட எதிர்பார்ப்பு நேற்று முடிவுக்கு வந்தது. ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் நான் கடவுளைக் காண ஆர்வமாக இருந்தனர். படத்தின் பி‌ரீமியர் ஷோவில் பங்கு கொள்ளாத திரை பிரபலங்கள் நேற்று திரையரங்குகளில் முண்டியடித்தனர்.

தமிழ்நாடு முழுவதும் நேற்று ூறு சதவீத வசூலைப் பெற்றது நான் கடவுள். அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் அலை மோதியது. சென்னையில் சில திரையரங்குகளில் டிக்கெட் விலையில் இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக பிளாக்கில் விற்கப்பட்டன.

ச‌ரி, படம் பார்த்த பொதும‌க்க‌ளி‌ன் கரு‌த்து என்ன?

படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. பாலா படத்தில் எதிர்பார்க்கப்படும் வித்தியாசமான கதாபாத்திரம், வித்தியாசமான அனுபவம் இதிலும் உண்டு. ஆனால், சேது, பிதாமகனில் கூடிவந்த முழுமை இதில் இல்லை என்பது பொதுவான கருத்து.

சில விருதுகளை படம் கைப்பற்றும், அந்த விருதில் ஒன்று நிச்சயம் பூஜாவுக்கானதாக இருக்கும் என்பது அனைவ‌ரின் உறுதியான முடிவு. மொத்தத்தில் கடவுள் கைவிடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்