இரண்டு படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் தனுஷ். ஒன்று நட்புக்காக. இன்னொன்று அன்புக்காக.
மலையாளப் படமான நந்தனம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் கடவுளாக சின்ன வேடம் ஒன்றில் தோன்றுகிறார் தனுஷ். படத்தை சுப்ரமணிய சிவா இயக்குகிறார். திருடா திருடி வெற்றிப் படத்தை தந்ததற்காக இந்த கைமாறு.
இன்னொரு படம், காதல் வசமாகி. கஸ்தூரிராஜா இயக்கும் படம். முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தில் ஸ்டார் வேல்யூவுக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார் தனுஷ். இதுவும் கெஸ்ட்ரோல்தான். பெஸ்ட் ரோலாகவும் இருக்குமா?