பிங்க்பாந்தர் படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொள்வதற்குமுன் சென்னையில் நடந்த எந்திரன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா ராய்.
பெரு, வேலூர், கோவா படப்பிடிப்பை போலவே சென்னையிலும் பாதுகாப்பு வளையத்துக்குள் ராணுவ கட்டுப்பாட்டுடன் நடந்தது ரஜினி, ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு.
திருமண காட்சி ஒன்றுக்காக சிட்டியில் உள்ள செல்வந்தர்களின் கார்கள் தருவிக்கப்பட்டன. இருபது லட்சத்துக்கு அதிகமான மதிப்புள்ள கார்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. ரஜினி, ஐஸ்வர்யா ராய் திருமண காட்சிக்காகத்தான் இந்த கார்கள் தருவிக்கப்பட்டன என்கிறார்கள்.
சென்னையிலும், புறநகரிலும் படப்பிடிப்பு நடந்தபோது இயக்குனர் ஷங்கருக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் ரஜினி வீட்டிலிருந்துதான் சாப்பாடு சென்றிருக்கிறது. நண்பர் அமிதாப் பச்சனின் மருமகள் என்பதால் ஐஸை கொஞ்சம் ஸ்பெஷலாகவே கவனித்திருக்கிறார் ரஜினி.
சூப்பர் ஸ்டாரின் இந்த விசால மனம் கண்டு வியந்து போனாராம் உலக அழகி.