த்‌ரிஷா கலந்து கொள்ளாத போட்டோ செஷன்

வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (14:47 IST)
போட்டோ செஷனில் பிஸியாக இருக்கிறார்கள் சிம்புவும், கவுதம் வாசுதேவ மேனனும்.

சிலம்பாட்டத்துக்குப் பிறகு கவுதம் இயக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் சிம்பு. உடன் நடிப்பது த்‌ரிஷஎன்பது உறுதி செய்யப்படாத தகவல்.

இந்தமுறை அக்மார்க் காதல் கதையை இயக்குகிறார் கவுதம். குத்துப் பாட்டு இல்லாத, வெத்து சண்டைகள் இல்லாத காதல் படம். இதன் போட்டோ செஷன் சென்னையில் நடந்தது.

பொதுவாக போட்டோ செஷனில் நாயகன், நாயகி இருவரும் கலந்து கொள்வார்கள். அதன்படி சிம்புவுடன் த்‌ரிஷாவும் போட்டோ செஷனில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

இங்கு நடந்தது வேறு. சிம்பு மட்டுமே கலந்து கொண்டார். சிம்புவுடன் த்‌ரிஷநடிப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை, ஆகவேதான் த்‌ரிஷமிஸ்ஸிங் என்கிறார்கள்.

ஜோடி யாராக இருந்தாலும் படப்பிடிப்பு தொடங்கினால் ஸ்பாட்டுக்கு வந்துதானே ஆகவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்