சிரிப்பழகி சினேகா மவுனமாக இருந்தால் தாங்குமா நாடு? இது அந்த மவுனம் அல்ல.
சினேகா ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி. விரைவில் சினேகா நடித்தப் படம் ரிலீஸாகப் போகிறது. தமிழில் சினேகா நடித்த படம் எதுவும் தற்சமயம் வெளியாகும் நிலையில் இல்லை. தெலுங்கில்? அங்கேயும் இதே நிலைதான். பிறகெப்படி இப்படியயாரு செய்தி?
சினேகா தெலுங்கில் ஆரம்ப காலத்தில் நடித்த படமொன்றை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். படத்தில் சினேகாவுக்கு ஜோடியாக நடித்திருப்பவர், விக்ரமாதித்யா. சினேகாவின் இளமை துள்ளும் பருவத்தில் எடுக்கப்பட்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது (சினேகாவின் இளமை இப்போது மட்டும் துள்ளவில்லையா என்று கேட்காதீர்கள்).
தெலுங்கில் அமோகமாக ஓடிய இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். சினேகா ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியான செய்திதான்.