மாணவர்களின் இடையில் ஏற்படும் தீய பழக்கவழக்கங்கள் சமூகத்தை எப்படி பாதிக்கின்றன என்பதை அடிப்படையாக வைத்து தயாராகிறது, தாலாட்டுதே வானம்.
இந்த ஒன் லைனுடன் மாணவன் ஒருவன் தனது படிப்புக்காக படும் கஷ்டங்களும், மென்மையான காதலும் இடையே வந்து போகிறது. சங்கர் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அல்ல, அறிமுகம். புதுமுகங்கள் பிரேம், நசினுடன் தண்டபாணி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
படத்துக்கு சிவா இசையமைத்துள்ளார். செங்கதிர்வாணன், கவிதாசன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். பாடல்கள் அனைத்தும் வெற்றிபெறும் என்பது பாடல்கள் எழுதியவர்கள் மற்றும் பாடல்களை கேட்டவர்களின் நம்பிக்கை.
கவுதம் சினி ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.கே.ஆர். படத்தை தயாரித்துள்ளார்.