பகுத்தறிவின் பக்தி

வியாழன், 5 பிப்ரவரி 2009 (15:40 IST)
தனது படங்களில் பகுத்தறிவு பிரச்சாரம் செய்து வரும் விவேக்குக்கு பகுத்தறிவே வினையாக விடிந்திருக்கிறது.

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதிலிருந்து தொடங்கியது அனைத்து சர்ச்சைகளும். கலைவாணருக்கே பத்மஸ்ரீ கொடுக்காதபோது சின்ன கலைவாணருக்கு எப்படி விருது கொடுக்கலாம் என கோடம்பாக்கத்தில் பொருமல் சத்தம் தொடர்ந்து கேட்கிறது.

இந்நிலையில் விருது கிடைத்ததுக்கு நன்றி தெ‌ரிவிக்க திருப்பதி சென்று பாலா‌ஜியை குடும்பத்துடன் த‌ரிசித்துவிட்டு வந்திருக்கிறார் விவேக். படங்களில் பகுத்தறிவு பிரச்சாரம் செய்கிறவர் இப்படி இரட்டை வேடம் போடலாமா என ஏற்றிவிடுகிறார்கள் விருது கிடைக்காத போட்டியாளர்கள்.

அப்படியே சாமி கும்பிடுவதாக இருந்தால் ஆந்திராவுக்கு ஏன் போக வேண்டும்? உள்ளு‌ரில் தமிழ் கடவுள் முருகன் இல்லையா என முறுக்குகிறார்கள்.

பதில் சொல்ல வார்த்தையை கோர்த்துக் கொண்டிருக்கிறார் பகுத்தறிவாளர்.

வெப்துனியாவைப் படிக்கவும்