பிரம்மதேவா பிரமிப்புகள்

புதன், 4 பிப்ரவரி 2009 (15:32 IST)
படத்தின் டபுள் பாஸிட்டிவ்வை இயக்குனர்களும், தயா‌ரிப்பாளர்களும்தான் பார்ப்பார்கள். ஆனால், வித்தியாசமாக படம் தயாரானதும் பொது ஜனங்களுக்கு இலவசமாக திரையிட்டுக் காட்டியிருக்கிறார் பிரம்மதேவா படத்தின் இயக்குனர், தர்மலிங்கா.

சமூகத்தின் பலதரப்பட்ட ஜனங்களில் பத்து பத்து பேரை தேர்ந்தெடுத்து படத்தை போட்டுக் காட்டியிருக்கிறார்கள். பப்ளிக்கின் பல்ஸ் அறியவே இந்த திரையிடல்.

ச‌ரி, படம் பார்த்தவர்களின் ‌ரியா‌க்சன் என்ன?

எல்லோருக்கும் படம் பிடித்திருந்தது. ஒரு மூதாட்டி படம் பார்த்து தேம்பித் தேம்பி அழுதது படத்துக்கு கிடைத்த முதல் பாராட்டு. உற்சாகமாகச் சொன்னார் தர்மலிங்கா.

ராம், சுவாதி சர்மா, ஆர்த்தி வர்மா, தேஜாஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்