சிபியின் கரம் சிரம் புறம்

புதன், 4 பிப்ரவரி 2009 (15:24 IST)
கரம் சிரம் புறம் நீட்டாதீர். அரசு பேருந்தின் புகழ்மிக்க அறிவுரை. இதையே தலைப்பாக வைத்து தயாராகிறது ஒரு படம்.

நாணயம் படத்தில் வில்லனாக நடித்தாலும் சிபியின் குறி, கதாநாயகன் மட்டுமே. வித்தியாசத்துக்கு ஒரு வில்லன் வேடம் அவ்வளவுதான். நாணயத்துக்குப் பிறகு நந்தகுமார் இயக்கும் படத்தில் சிபி நாயகன்.

அறிமுக இயக்குனர் சாப்ளின் இயக்கும் படத்திலும் சிபியே ஹீரோ. படத்தின் பெயர், கரம் சிரம் புறம். பேருந்தில் பெரும்பகுதி காட்சிகள் நடப்பதால் இந்தப் பெயர்.

தொடர்ந்து இரண்டு படங்களில் நாயகனாக நடிப்பதால் சிபியின் வில்லன் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்