கல்லூரிக்குப் பிறகு காற்று தமன்னா பக்கம். படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம்... நீள்கிறது படப் பட்டியல். பேச்சுவார்த்தையில் அரை டஜன் படங்கள் இருப்பதாக தகவல்.
தெலுங்கிலும் தமன்னாவுக்கு தாரைதப்பட்டை வரவேற்பு. கடைசியாக நடித்த ஹேப்பி டேய்ஸ் வெள்ளிவிழா. ஆந்திரா அரசின் பல விருதுகள் ஹேப்பி டேய்ஸ்சின் கணக்கில் வரவாகியிருக்கிறது. நாயுடுக்கள் தேவுடு காக்கிறார்கள் தமன்னாவுக்காக.
தெலுங்கில் லம்பாக சம்பளம் என்பதால் அங்கும் தமன்னாவின் கவனம் குவிகிறது. சித்தார்த் nஜாடியாக கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் படத்தில் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் என மேலும் பல தெரிந்த முகங்கள் படத்தில் உண்டு.
படம் ஹிட்டானால் தெலுங்கில் செட்டிலாகும் எண்ணமும் உண்டு இவரிடம். காசு இருக்கும் இடமே நடிகர்களுக்கு அயோத்தி.