நடிகை மீது புகார்

புதன், 4 பிப்ரவரி 2009 (13:48 IST)
நடிகை மேக்னா மீது தயா‌ரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. கவிதாலயா புஷ்பகந்தசாமி இந்த புகாரை கொடுத்துள்ளார்.

வைதேகி காத்திருந்தாள் படத்தில் விஜயகாந்தின் ஜோடியாக நடித்தவர் பிரமிளா ஜோஷி. இவரது மகள் மேக்னா. கவிதாலயா தயா‌ரிப்பில் ஸெல்வன் இயக்கிவரும் கிருஷ்ணலீலை படத்தில் நடித்து வருகிறார் மேக்னா. ஏப்ரலில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் கிருஷ்ணலீலை படத்திற்கு கொடுத்த கால்ஷீட்டில், எங்க வீட்டு பிள்ளை படத்தில் மேக்னா நடித்ததாக கூறப்படுகிறது. ஒப்பந்தப்படி, கிருஷ்ணலீலையை முடித்துவிட்டு வேறு படங்களில் நடிக்க கவிதாலயா அவரை கேட்டுக் கொண்டது. அதற்கு மேக்னா மறுத்துவிட்டார்.

இதனால், கவிதாலயா சார்பில் பாலசந்த‌ரின் மகள் புஷ்பா கந்தசாமி மேக்னா மீது தயா‌ரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் தெ‌ரிவித்துள்ளார். ஒப்பந்தப்படி கிருஷ்ணலீலையில் மேக்னா நடித்துதர வேண்டும். ஒப்பந்தத்தை அவர் மீறியதால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக புகா‌ரில் கூறப்பட்டிருந்தது.

புகாரைத் தொடர்ந்து கிருஷ்ணலீலையில் நடிக்க மேக்னா அறிவுறுத்தப்படுவார் என தெ‌ரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்