ஏப்ரலில் பட்டாளம்

செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (17:26 IST)
பிப்ரவ‌ரி மாதத்தைவிட்டால் பள்ளிகளுக்கு ப‌ரிட்சை தொடங்கிவிடும். யாரும் திரையரங்கு பக்கம் எட்டிப் பார்க்க மாட்டார்கள். எனவே பிப்ரவ‌ரியில் படத்தை வெளியிட முட்டி மோதுகிறார்கள் தயா‌ரிப்பாளர்கள்.

சுமார் இருபது படங்கள் ‌ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. சென்ற மாதம் எட்டுப் படங்கள் மட்டுமே திரைக்கு வந்தன. அதனால் இந்த மாதமும் பத்துப் படங்களுக்குள்தான் வெள்ளித்திரையை த‌ரிசிக்கும் என்பது திரையரங்கு உ‌ரிமையாளர்களின் கருத்து.

இந்த பத்திலிருந்து தானாகவே விலகியிருக்கிறது பட்டாளம். லிங்குசாமியன் திருப்பதி பிரதர்ஸ் தயா‌ரித்திருக்கும் இந்தப் படம் மாணவர்களைப் பற்றியது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட்டால் அனைவரையும் கவரலாம் என்பதால் படம் முடிந்த பிறகும் பட வெளியீட்டை ஏப்ரலுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

6ம் தேதி நான் கடவுள் வெளியாவதால் பலரும் தங்களது படத்தை வெளியிட தயக்கம் காட்டி வருகிறன்றனர். ஆக, இம்மாதமும் படங்களின் எண்ணிக்கை எட்டை தாண்டாது என்பது கோடம்பாக்க கணிப்பு.

வெப்துனியாவைப் படிக்கவும்