பேராண்மை - களைகட்டிய காடு

செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (17:08 IST)
பேராண்மையில் ஜெயம் ரவிக்கு டூயட் இல்லை என்ற குறை தீர்ந்தது. கன்ஷிகா, வர்ஷா, வசுந்தரா ஆகியோருடன் ஒரு பாடலில் நடித்திருக்கிறார். அடித்திருக்கிறார் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

ஜனநாதனின் இயற்கைப் படத்துக்குப் பிறகு வித்யாசாகரும், வைரமுத்துவும் பேராண்மையில் இணைந்துள்ளனர். காதல் வந்தால் சொல்லி அனுப்பு ஹிட் பாடலை தந்த ஜோடி அல்லவா...? பேராண்மையில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். குறிப்பாக, காடு களைகட்ட என்ற பாடல்.

தலக்கோணத்தில் இந்தப் பாடலின் படப்பிடிப்பு நடந்தது. வசுந்தரா, கன்ஷிகா, வர்ஷமூவரும் பாடலுக்கு ஆட, பின்னணியில் வில்லன்களுடன் ஜெயம் ரவி ஆக்ரோஷமாக சண்டையிடுவதுபோல் வித்தியாசமாக பாடலை படமாக்கினார் ஜனநாதன்.

பார்ப்பதற்கும், கேட்பதற்கும் இந்தப் பாடல் வித்தியாசமான அனுபவமாக இருக்குமாம். வெற்றிக் கூட்டணி அல்லவா, வித்தியாசமாக‌த்தான் இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்