குத்துப் பாடலில் கருத்து

செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (16:13 IST)
மல்லிகை ராஜன் இயக்கும் படம், பக்தன். முதலாளியின் மனைவியை காதலிக்கும் தொழிலாளியின் கதை. வில்லங்கமான இந்தப் படத்தில் குத்துப் பாடல் ஒன்று இடம்பெறுகிறது.

வழக்கமாக குத்துப் பாடலென்றால் பாடல் வ‌ரிகளில் இரட்டை அர்த்த நெய் மணக்கும். பக்தனோ கான்ட்ரவர்ஸியான கருவை கொண்ட படம். பாடல் வ‌ரிகளில் மூன்று, நான்கு அ‌ர்த்தம் கூட தொனிக்கும் என்றுதான் நினைப்போம். தவறு. பாடல் முழுக்க கருத்து கவிச்சி.

காட்டுக்குள்ளே தீவிருக்கு என்று தொடங்கும் அந்தப் பாடலில் வரும் பல்லவி இப்படி தொடங்குகிறது.

பெண்ணே சிலை என்றால் உடைந்து போகாதா..
கண்ணே கலையே என்றால் அது கலைந்து போகாதா..
பூக்கள்போல் என்றால் அது வாடிப் போகாதா..
பாக்கள்போல் என்றால் சுவை மாறிப் போகாதா..

இப்படி பாடல் முழுக்க கவிதையும், கருத்தும் மணக்கிறது. பாடலை கருத்து கவிச்சியுடன் எழுதியிருப்பவர், பிறைசூடன்.

வெப்துனியாவைப் படிக்கவும்