அடுத்து யாரை வைத்து படம் இயக்குகிறார்? இந்த கேள்விக்கான பதில் கௌதமுக்கே தெரியுமா என்பது சந்தேகம். அந்தளவுக்கு நாளொரு தகவல், பொழுதொரு வதந்தி.
அஜித் படத்தை கௌதம் இயக்கப் போவதில்லை என்பது உறுதியான பிறகு தொடங்கியது இந்த அக்கப்போர். தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார் கௌதம். ஹைதராபாத்தில் ஸ்டோரி டிஸ்கஷன்கூட நடத்தப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தை முடித்தப் பிறகு இந்தியில் சல்மான் கானை வைத்து படம் இயக்குவதாக தனது திட்டத்தை மாற்றிக் கொண்டார். இப்போது சல்மானும் இல்லையாம். பிறகு யார்?
கடைசியாக கசியவிடப்பட்ட செய்தி, சிம்பு. போடா போடி படத்தில் நடிப்பதாக இருந்த சிம்பு அதை தள்ளிவைத்து கௌதம் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.