சங்கீதா – கி‌ரிஷ் திருமணம்

திங்கள், 2 பிப்ரவரி 2009 (14:21 IST)
ி‌ரிஷின் பெற்றோ‌ரின் எதிர்ப்பை மீறி திருவண்ணாமலையில் சங்கீதா, கி‌ரிஷ் திருமணம் விம‌ரிசையாக நடந்தது. இதில் ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டனர்.

நடிகை சங்கீதாவும், பாடகர் கி‌ரிஷும் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சந்தித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்தக் காதலுக்கு கி‌ரிஷின் தந்தை கடும் எதிர்ப்பு தெ‌ரிவித்தார். கி‌ரிஷைவிட சங்கீதா மூத்தவர், மேலும் நடிகை ஒருவரை தனது மகன் திருமணம் செய்து கொள்வதை ஏற்க முடியாது என அவர் கூறியிருந்தார்.

அவரது எதிர்ப்பை மீறி நேற்று திருவண்ணாமலை கோயிலில் சங்கீதா, கி‌ரிஷ் திருமணம் நடந்தது. இயக்குனர்கள் பாலா, தரணி, நடிகைகள் ‌ரீமாசென், ஐஸ்வர்யா, ஸ்ரீப்‌ரியா, ரகசியா, மும்தா‌ஜ், நடிகர்கள் ‌‌‌ஜீவா, சின்னிஜெயந்த் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருமணத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கோயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்