கிக்கான இந்தப் பாடல் ஜெய், விஜயலட்சுமி நடித்திருக்கும் அதே நேரம் அதே இடம் படத்தில் இடம்பெறுகிறது. பிரேம்ஜி இசையமைத்திருக்கிறார். பாடல் வரிகள் மட்டுமில்லை பாடலுக்கான காரணமும் செமசூடு என்றார் படத்தின் இயக்குனர் எம். பிரபு. அதை கேட்பதைவிட நமக்கு வேற என்ன வேலை.
விக்கல் வந்தால் அதிர்ச்சியான தகவலை சொன்னால் போதும், விக்கல் நின்றுவிடும். இந்தப் படத்தில் காதலின் வாசலில் நிற்கும் விஜயலட்சுமிக்கு விக்கல் வருகிறது. அருகில் வாசலை திறந்துவைத்த ஜெய்.
பழமைகளை தூக்கியெறிவதுதானே காதல். விக்கல் நிற்க அதிர்ச்சியான தகவலை சொல்வதற்குப் பதில் விஜயலட்சுமியின் உதட்டில் அழுத்தமாக முத்தம் பதித்து விடுகிறார், ஜெய். இந்த ஆயிரம் வாட்ஸ் அதிர்ச்சியில் விக்கல் நின்று விடுகிறது. விக்கித்து நிற்கிறார் விஜயலட்சுமி. அவர் என்ன சொல்வாரோ என்ற பயத்தில் ஜெய்.
இந்த விரும்பத்தகாத மௌனத்தில் வெட்கம்கெட்ட விக்கல் மீண்டும் வருகிறது. விஜயலட்சுமி வெட்கத்தில் பார்க்க, ஜெய் சொர்க்கத்தில் மிதக்க... வருகிறது வெண்ணிலவு டூயட்.