சிபி – மீண்டும் ஹீரோ

சனி, 31 ஜனவரி 2009 (14:44 IST)
வில்லனாக நடிக்க மாட்டேன் என்று ர‌ஜினி, கமல் படங்களையே நிராக‌ரித்த சத்யரா‌ஜ், தெலுங்கில் வில்லனாக நடிக்கிறார். அதுவும் கிழட்டு வில்லனாக. நாயகனாக நடித்துவரும் சிபி, நாணயம் படத்தில் வில்லனாக நடிக்கிறார். அப்பாவுக்கும் மகனுக்கும் என்னவாயிற்று?

இந்த திடீர் மாற்றம் குறித்து துக்கம் விசா‌ரிக்காதவர்களே இல்லை. சத்யராஜுக்கு வாய்ப்புகள் வறண்டு வருகிறது, அவர் வில்லனாக நடிக்கிறார் என்பதை பு‌ரிந்து கொள்ள முடியும். ஆனால், சிபி?

நாணயம் படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரம் அவ்வளோ அழகாம். அதனால்தான் அந்த கேரக்டரை விரும்பி ஏற்றிருக்கிறாராம். ஆனால், தொடர்ந்து வில்லனாக நடிக்கப் போவதில்லையாம்.

பாருங்கள்... சிபியின் அடுத்தப் படத்தை நந்தகுமார் இயக்குகிறார். அதில் சிபிதான் ஹீரோ. நாணயம் ஒரேயொரு வித்தியாசமான முயற்சி, அவ்வளவுதான் என விளக்கம் கிடைக்கிறது சிபி தரப்பில்.

நாணயம் வெளிவந்த பிறகு நிலைமை மாறாமல் இருந்தால் ச‌ரிதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்