பத்து தயாரிப்பாளர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு நிதியுதவி செய்து, படங்கள் தயாரிக்கப் போவதாக பிரமிட் சாய்மீரா அறிவித்ததை சுலபத்தில் மறக்க முடியாது. பிரமாண்ட விழா எடுத்து சொன்னதை ஆர்ப்பாட்டமுடன் தொடங்கவும் செய்தார்கள்.
அந்த பத்தில் இரண்டோ மூன்றோ படங்களுக்குதான் பைனான்ஸ் போய்ச் சேர்ந்திருப்பதாகக் கூறுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, கொடுத்த காசில் படத்தை எடுத்து முடித்திருக்கிறார், தெய்வானை மூவிஸ் அமுதா துரைராஜ். வானம் பார்த்த பூமியிலே என்ற அந்தப் படத்தை ஜேப்பி. அழகர் இயக்கியிருக்கிறார்.
அடிப்பது வீரமில்லை, மற்றவர்கள் மதிக்க நடப்பதுதான் வீரம் என வீரத்துக்கு புது இலக்கணம் எழுதியிருக்கும் இந்தப் படம் முடிந்த பிறகும் படத்தை வெளியிடாமல் இருக்கிறது பிரமிட் சாய்மீரா. அவர்கள் எதற்காக காத்திருக்கிறார்கள் என்பது புரியாமல் வானம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் படத்தில் பணிபுரிந்தவர்கள்.