மனைவியுடன் பாடிய கருணாஸ்

சனி, 31 ஜனவரி 2009 (14:01 IST)
கருணாஸ் இப்போது காமெடியன் மட்டுமல்ல.. இசையமைப்பாளரும்கூட. ராஜாதிராஜபடத்துக்கு நண்பர் பால்ஜெயுடன் இணைந்து இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்கு முதலில் இசையமைப்பதாக இருந்தவர் தினா. நான்கு பாடல்கள் கம்போஸான நிலையில் அதிரடியாக அவரை நீக்கிவிட்டு கருணாஸ் - பால்ஜெயை நியமித்திருக்கிறார், இயக்குனர் ஷக்திசிதம்பரம்.

இந்த நீக்கத்திற்குப் பின்னால் இருப்பது கருணாஸ் என்பது தினா தரப்பின் குற்றச்சாட்டு.

தினா கம்போஸ் செய்த பாடல்கள் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. ஒரு பாடல் மட்டும் படத்தில் இடம்பெறுகிறது. கத்தி‌ரிக்கா... கத்தி‌ரிக்கா என்ற அந்தப் பாடலை கம்போஸ் செய்தது கருணாஸ்தான், அவரும் அவரது மனைவியும் பாடியிருக்கிறார்கள் என்றார் ஷக்திசிதம்பரம்.

தினா இதற்கு எப்படி ஒத்துக்கொண்டார்? ம்.. எங்கோ புகையுற வாசனை வருகிறதே...

வெப்துனியாவைப் படிக்கவும்