கழற்றி விடப்பட்ட இசையமைப்பாளர்

வெள்ளி, 30 ஜனவரி 2009 (15:06 IST)
நான் அவன் இல்லை படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. நான் அவன் இல்லையில் நடித்த ‌‌ஜீவன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். படத்தை இயக்குகிறவர், செல்வா. நான் அவன் இல்லை படத்தை இயக்கியவர்.

இரண்டாம் பாகத்தில் நாயகிகள் மட்டுமே மாறுகிறார்கள். ச‌ரியாகச் சொல்வதென்றால், மாற்றப்படுகிறார்கள். இசையமைப்பாளரை மாற்றும் எண்ணம் தயா‌ரிப்பாளர் இத்தேஷ் ஜெபக்குக்கு இல்லை. நான் அவன் இல்லை படத்துக்கு இசையமைத்த விஜய் ஆண்டனியே அனைவ‌ரின் சாய்ஸ்.

இந்த நல்லெண்ணத்துடன் அவரை அணுகியபோது ஆண்டனி கேட்டது ஐம்பது லட்சம். படம் தயா‌ரிக்க அல்ல, படத்துக்கு இசையமைக்க. நாக்க முக்கயில் ஆரம்பித்து விஜயின் வேட்டைக்காரன் வரை வந்துவிட்டார் விஜய் ஆண்டனி. அதன் எதிரொலிதான் இந்த ஐம்பது லட்சம்.

நமக்கு இந்த ஷங்கர் பட பட்ஜெட் கட்டுப்படியாகாது என்று அவருக்கு பதில் டி. இமானை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். படத்திலிருந்து கழற்றிவிடப்பட்டிருக்கிறார், விஜய் ஆண்டனி.

வெப்துனியாவைப் படிக்கவும்