அந்தரத்தில் முதல்வ‌ரின் படங்கள்

வியாழன், 29 ஜனவரி 2009 (15:56 IST)
கதை என்று யார் போனாலும் முதல்வர் வீட்டுக் கதவு திறக்குமா என்பது சந்தேகமே. ஏற்கனவே கதை வாங்கிச் சென்றவர்கள் அந்தளவுக்கு காயப்படுத்தியிருக்கிறார்கள் முதல்வரை.

பா. விஜய் ஹீரோவாக நடிக்க தடபுடலாக ஆரம்பிக்கப்பட்டது, தாய் காவியம். ருஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்கியின் தாய் நாவலை தமிழில் கவிதை நடையில் எழுதியிருந்தார் முதல்வர். அந்த‌க் கதைதான் பா. விஜய் நடிப்பில் தாய் காவியமாக ஆரம்பிக்கப்பட்டது.

சீனா சென்று ஒரு பாடல் காடசி எடுத்ததோடு ச‌ரி. அடுத்த தேதி குறிப்பிடாமல் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முதல்வ‌ரின் வரலாற்று கதையான பொன்னர் சங்கரை திரைப்படமாக்க முறைப்படி அனுமதி வாங்கிய தியாகராஜன், படத்தை இன்னும் தொடங்கவில்லை. பிரேவ்ஹார்ட் படத்துக்கு இணையாக பொன்னர் சங்கரை எடுக்கப் போகிறோம் என்று அறிவிப்பெல்லாம் ஆர்ப்பாட்டமாக‌த்தான் இருந்தது. ஆனால், தேர் வீதிக்கு வந்தால்தானே.

தன்னுடைய கதைகளே இப்படி நொண்டியடிப்பதால், இனி கதை கேட்டு யார் வந்தாலும் கதவை சாத்துவதென முடிவு செய்துள்ளாராம் முதல்வர்.

எப்படியோ, தமிழர்கள் தப்பித்தார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்