படம் ஜெயித்தால்தான் தியேட்டர் தியேட்டராகப் போய் ரசிகர்களை சந்திக்க வேண்டுமா. சுமாரான படத்துக்கு நெம்புகோல் கொடுக்கவும் திரையரங்குக்கு போகலாம். அந்த வேலையைதான் செய்து கொண்டிருக்கிறார் இளைய தளபதி.
தளர்ந்த வில்லுக்கு டானிக் ஏற்றி வருகிறவர், அடுத்தப் படமான வேட்டைக்காரனுக்காக ஆந்திரா செல்கிறார். அடுத்த மாதம் முதல் ஆந்திராவின் ராஜமுந்திரியில் படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.
ஹீரோயின் அனுஷ்கா, இசைக்கு விஜய் ஆண்டனி என்று ஏற்கனவே டீம் செட்டாகிவிட்டது. ஏவி.எம். தயாரிக்கும் இந்தப் படத்தை தரணியின் முன்னாள் அசிஸ்டெண்ட் பாபு சிவன் இயக்குகிறார்.