குறும்பட வட்டத்தின் நான்காவது கூட்டம்

வியாழன், 29 ஜனவரி 2009 (15:32 IST)
குறும்படங்களுக்கென்றே தொடங்கப்பட்ட தமிழ் ஸ்டுடியோ டாட் காம் மாதம்தோறும் குறும்பட வட்டம் என்ற பெய‌ரில் குறும்பட வளர்ச்சிக்கான கூட்டத்தை நடத்தி வருகிறது.

இதுவரை மூன்று கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இயக்குனர் ஞானராஜசேகரன், பி. லெனின், வ. கௌதமன் போன்ற படைப்பாளிகள் இதில் கலந்து கொண்டு தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

குறும் படங்கள் திரையிடல், அதுபற்றி விவாதம், குறும் படங்களை எப்படி லாபகரமானதாக எடுப்பது உள்பட குறும்பட படைப்பாளிகளுக்கு தேவையான அனைத்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும், விளக்கங்கள் தரப்படும்.

சென்ற மாத கூட்டத்தில் பேராசி‌ரியை பத்மா விவேகானந்தன் கலந்து கொண்டு, இலக்கிய படைப்பை எப்படி திரைப்படமாக்குவது என்பது குறித்து உரையாற்றினார். இதில் வ. கௌதமனின் இரண்டு குறும் படங்கள் திரையிடப்பட்டு விவாதிக்கப்பட்டன. படம் குறித்த விளக்கங்கள் வ. கௌதமனிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்டது.

குறும்பட வட்டத்தின் நான்காவது கூட்டம் சென்னை கன்னிமரா நூலகத்துக்கு எதி‌ரிலுள்ள ‌‌ஜீவன் ஜோதி கட்டடத்தின் ‌ரிசப்ஷன் ஹாலில் வரும் 31ம் தேதி மாலை மூன்று மணிக்கு நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினர், பிலிம் எடிட்டர் சுரேஷ் அர்ஸ்.

மேலும் தகவல்கள் அறிய 98406 98236 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்