இந்த ஆண்டின் முதல் எதிர்பார்ப்புக்குரிய படம், வெண்ணிலா கபடி குழு. சுசீந்திரன் படத்தை இயக்கியிருக்கிறார்.
கிராமத்து இளைஞர்களின் கபடி மீதான ஆர்வத்தை பின்னணியாகக் கொண்டு தயாராகியிருக்கிறது சுசீந்திரனின் இந்தப் படம். பாடல்கள் எஃப்.எம்.களில் நேயர்களின் விருப்பப் பாடல்களாக உலா வருகின்றன.
வெயில், சுப்பிரமணியபுரம் வரிசையில் இந்தப் படமும் இடம்பெறும் என்பது திரையுலகினிரின் நம்பிக்கை. ரசிகர்களைவிட இயக்குனர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
2009 ஆம் ஆண்டின் முதல் வெற்றிப் படம் என்ற பெருமையை பெறுமா வெண்ணிலா கபடி குழு? நாளை இந்நேரம் பதில் தெரிந்திருக்கும்.