ஓரம்போ படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி இயக்கும் புதிய படம், ராக்கோழி. ஜெய், லேகா வாஷிங்டன் நடிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகிறது.
ஆனால், படப்பிடிப்பு?
அதே நேரம் அதே இடம், அர்ஜுனன் காதலி, வாமனன் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஜெய். வெங்கட்பிரபுவின் கோவா படமும் விரைவில் தொடங்க உள்ளது. ராக்கோழியின் தாமதத்துக்கு ஜெய்யின் இந்த பிஸி ஷெட்யூலே காரணமாக கூறப்படுகிறது.
ராக்கோழியின் நாயகி லேகா வாஷிங்டன்னுக்கு இந்தப் படத்தைவிட்டால் வேறு படங்களில்லை. அதனால், ராக்கோழி தொடங்குவதற்காக காத்திருக்கிறார்.
வரும் மே மாதம் ராக்கோழியின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக இயக்குனர் அலுவலக வட்டாரம் தெரிவிக்கிறது.