யுகே-யில் வில்லு

புதன், 28 ஜனவரி 2009 (13:54 IST)
வில்லு தமிழ்நாட்டில் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டவில்லை. அழகிய தமிழ் மகன், குருவி படங்களைவிட மோசமான தோல்வி என்கின்றன, திரையரங்குகளிலிருந்து வரும் செய்திகள்.

தமிழில் வெளியான அன்று, யுகே-யிலும் வில்லு சில திரையரங்குகளில் வெளியானது. குருவியைவிட வில்லு கலெ‌க்சன் சுமார் என்கின்றன அங்கிருந்துவரும் செய்திகள்.

இதுவரை 27.27 லட்சங்களை மட்டுமே வில்லு வசூலித்துள்ளது. ஒரு திரையிடல் சராச‌ரியைப் பொறுத்தவரை, அ‌க்சய் குமா‌ரின் சாந்தினி சவுக் டூ சைனா படத்திற்கு அடுத்த இடத்தில் விஜய் படம் உள்ளது. வில்லுக்கு அடுத்தப்படியாக க‌ஜினி மற்றும் ஷாருக்கானின் படங்கள் வருகின்றன.

யுகே-யில் குருவி ஒரு கோடிக்கும் மேல் வசூலித்தது. அதனை வில்லு முறியடிக்கும் வாய்ப்பு குறைவாகவே தென்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்