ஆங்கிலோ இந்தியனாக த்‌ரிஷா

புதன், 28 ஜனவரி 2009 (13:54 IST)
தமிழ்ப் பெண் என்றாலும் த்‌ரிஷாவுக்கு இன்னும் தமிழ் தகராறுதான். படிக்கத் தெ‌ரியாது. மேடையில் பேசுவது என்றாலும் காதலா காதலா பிரபுதேவா அளவுக்கு திக்கும். வீட்டில், வெளியில் எங்கும் ஆங்கிலம். அசப்பில் ஆங்‌கிலோ இந்தியனோ என்று தோன்றும்.

்‌ரிஷாவின் இந்த கேரக்டருக்கு தகுந்தபடி அமைந்திருக்கிறது ஒரு படம். பொல்லாதவன் டீமின் புதிய படத்தில் இவர்தான் நாயகி. தனுஷ் ஹீரோ. வெற்றிமாறன் இயக்கம். பீ‌ரியட் படமான இதில் ஆங்கிலோ இந்தியனாக நடிக்கிறாராம் த்‌ரிஷா.

மதுரையில் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் நடக்க இருக்கிறது. த்‌ரிஷநடிக்கும் இந்தப் படத்தில் முதலில் ஒப்பந்தமானார் ஸ்ரேயா என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்