ஸ்ரீகாந்தின் ரசிக்கும் சீமானே

புதன், 28 ஜனவரி 2009 (13:51 IST)
ரசிக்கும் சீமானே படத்தில் ஸ்ரீகாந்துக்கு எதிர்மறை நாயகன் வேடம். நம்பவைத்து ஏமாற்றும் எட்டப்பன் கதாபாத்திரம்.

எட்டப்பன் என்ற பெயருக்கு எட்டப்பனின் வா‌ரிசுகள் எதிர்ப்பு தெ‌ரிவித்ததால் படத்தின் பெயரை ரசிக்கும் சீமானே என மாற்றி வைத்துள்ளனர். ஸ்ரீகாந்துக்கு ஜோடி நவ்யா நாயர்.

சரத்குமார் நடித்த வைத்தீஸ்வரனை இயக்கிய டாக்டர் ஆர்.கே. வித்யாதரன் ரசிக்கும் சீமானே படத்தை இயக்கியிருக்கிறார். அறிமுகமானது முதல் இழுத்துப் போர்த்தி நடித்த நவ்யா நாயர் இந்தப் படத்தில் தனது கிளாமர் விதிகளை தளர்த்தியிருக்கிறார், ரசிக சீமான்கள் ரசிப்பதற்காக.

இந்திரவிழா, மாணவர் தினம், போலீஸ் போலீஸ், மா, துரோகி... ஸ்ரீகாந்த் நடிக்கும் இந்தப் படங்களில் முதலாவதாக வெளிவருகிறது, ரசிக்கும் சீமானே.

வெப்துனியாவைப் படிக்கவும்