உறவாடி கெடுக்கும் நிஷா

செவ்வாய், 27 ஜனவரி 2009 (16:58 IST)
நிஷகோத்தா‌ி நடித்துவரும் கார்த்திகை படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ராமோ‌ஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்தது. கவர்ச்சியான பாடல் காட்சி. ஆடியவர் நிஷகோத்தா‌ி.

என்னென்னவோ சொல்ல வந்தேன்
சொல்லாமலே வந்து நின்னேன்..

என்ற அந்தப் பாடலுக்காக பல லட்சம் ருபாயில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அமோகா என்ற பெய‌ரில் ஜேஜே படத்தில் அறிமுகமானவர், நிஷகோத்தா‌ி என்ற தனது ஒ‌ரி‌ஜினல் பெயருடன் நடிக்கும் படம் இது.

விக்கிரமாதித்யா, சமி‌‌க்சா, மாளவிகாவும் படத்தில் நடித்திருக்கிறார்கள். நிஷாவுக்கு உறவாடிக் கெடுக்கும் வில்லி வேடம். ஒரு குடும்பத்தை பழிவாங்க அவர்களுடன் நெருங்கிப் பழகி தனது பழிவாங்கலை நடத்துகிறார்.

மாளவிகா நடிப்பதாக இருந்த வேடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்