நூறு பெயர் மாற்றம்

செவ்வாய், 27 ஜனவரி 2009 (16:38 IST)
ஏ.ஆர். முருகதாஸின் அசிஸ்டெண்ட் கிங்ஸ்லி இயக்கத்தில் சம்பத்குமார் தயா‌ரிக்கும் படம், நூறு. குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் நடிக்கும் ராமகிருஷ்ணன் நூறில் நாயகனாக நடிக்கிறார். இவர் சேரனின் முன்னாள் அசிஸ்டெண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் பெயரை சிவப்பு என மாற்றியுள்ளனர். நூத்துக்கு நூறு என்ற பெய‌ரில் ஏற்கனவே ஒரு படம் தயாராகி வருவதால் குழப்பத்தை தவிர்க்க இந்த‌ப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் தர்ஷனா நாயகியாக நடிக்கிறார். ரமணா ஆர்ட்ஸ் படத்தை தயா‌ரிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்