புகைக்கு தடையில்லை

செவ்வாய், 27 ஜனவரி 2009 (16:25 IST)
திரையில் புகைப்பிடிப்பதுபோல் நடிக்கக் கூடாது என படைப்பாளிகளின் சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் விதிமுறை ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

அமைச்சர் அன்புமணியின் நீண்ட போராட்டத்துக்குப் பின் அமல்படுத்தப்பட்ட இந்த புதிய சட்டத்தை எதிர்த்து இந்தி தயா‌ரிப்பாளர் மகேஷ்பட் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசா‌ரித்த நீதிபதிகளில் ஒருவர் அரசுக்கு சாதகமாகவும், இன்னொருவர் எதிராகவும் தீர்ப்பளித்தார். இதனால் இறுதி தீர்ப்பு அளிக்கும் பொறுப்பு நீதிபதி கவுலிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறுதி தீர்ப்பளித்த கவுல், திரைப்படங்களில் புகைப்பிடிப்பது போல் காட்சிகள் வைப்பதில் தவறில்லை, அதனை தடை செய்வது படைப்பாளியின் சுதந்திரத்தை பறிப்பதாகும் என கூறினார்.

இதன்மூலம் நீண்ட நாள் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்