பூபதி பாண்டியன் இயக்கத்தில் ஜெயம் ரவி

செவ்வாய், 27 ஜனவரி 2009 (16:17 IST)
பேராண்மை ஏறக்குறைய முடிந்துவிட்டது. முற்றிலும் வித்தியாசமான வேடம் ஜெயம் ரவிக்கு. ஜோடி கிடையாது, டூயட் கிடையாது. இந்திய திரையுலகுக்கே முற்றிலும் புதிய கதை என்கிறது பேராண்மை யூனிட்.

இந்தப் படத்துக்குப் பிறகு பூபதி பாண்டியன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. பூபதி பாண்டியனின் கடைசிப் படம் மலைக்கோட்டை. அடுத்து விக்ரம் நடிக்கும் ராஜவேசம், இல்லையில்லை... தனது தம்பியை வைத்து நானும் என் சந்தியாவும் படத்தை இயக்குகிறார் என பல்வேறு வதந்திக்கு இடம் கொடுத்தவர், அதையெல்லாம் பொய்யாக்கி ஜெயம் ரவியை இயக்கப் போகிறார்.

படத்தின் பெயர், ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. கார்த்திக் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் என்பது படத்தைப் பற்றிய லேட்டஸ்ட் தகவல். அப்படின்னா படம் லேட்டாகத்தான் வருமா?

வெப்துனியாவைப் படிக்கவும்