கந்தசாமிக்கு காஸ்ட்லி உடை

செவ்வாய், 27 ஜனவரி 2009 (16:14 IST)
பிலிமுக்குப் பதில் பணத்தால் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், கந்தசாமியை. தயா‌ரிப்பது தாணு என்ற ஒன்றே போதும், படத்தின் ‌ரிச்னெஸ் தெ‌ரிந்துவிடும்.

ஸ்ரேயாவின் அறிமுகப் பாடலை இத்தாலியில் எடுத்திருக்கிறார்கள். இத்தாலி பின்னணியில் இந்திய உடையில் ஆடினால் நன்றாகவா இருக்கும்? ரோமானிய உடை, ஆபரணங்கள் என்று அசத்தியிருக்கிறார்கள்.

உடைக்கு மட்டும் செலவு கால் கோடியாம். ஆபரணங்கள்? கோடியை தாண்டும் என்பதால் அதுமட்டும் கவ‌ரிங். மொத்தத்தில் இந்தப் பாடலுக்கு மட்டும் செலவு அரை கோடி.

ஹீரோயின் அறிமுகத்துக்கே இந்தப்போடு என்றால், ஹீரோவுக்கு? தலைசுத்துதப்பா.

வெப்துனியாவைப் படிக்கவும்