திரைத்துறையினருக்கு பத்ம விருதுகள்

செவ்வாய், 27 ஜனவரி 2009 (15:55 IST)
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் 133 பேர்.

இந்தப் பட்டியலில் சில திரைத்துறையினரும் உண்டு. வடக்கே ஐஸ்வர்யா ராய், தெற்கே ஜனங்களின் கலைஞன் விவேக். இருவரையும் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்திருக்கிறது மத்திய அரசு. எழுத்தாளரும், இயக்குனருமான ஜெயகாந்தன் பத்ம பூஷண் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விருது பெறப்போகிறவர்களுக்கு நமது வாழ்த்துகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்