படிக்காதவனை பாராட்டிய ர‌ஜினி

வெள்ளி, 23 ஜனவரி 2009 (16:01 IST)
மருமகனின் படத்தைப் பார்த்து கருத்து சொல்வது ர‌ஜினியின் வழக்கம். படிக்காதவனை மட்டும் பார்க்காமல் இருப்பாரா?

பார்த்தார்.. சென்னை ஃபோர் பிரேம் திரையரங்கில். இதற்காக அவருக்கு ஸ்பெஷல் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படத்தில் தனுஷ் அண்டு கோ செய்யும் காமெடி கலாட்டாக்களை ரசித்து சி‌ரித்தார் ர‌ஜினி.

நல்ல பொழுதுபோக்கு திரைப்படம் என படத்தின் இயக்குனர் சுராஜை பாராட்டியவர், இதே மாதி‌ி எல்லோரும் ரசிக்கிற படங்களில் தொடர்ந்து நடியுங்கள் என்று தனுஷை குஷிப்படுத்திவிட்டு கிளம்பினார்.

புல்ல‌ரித்துப் போயிருக்கிறார்கள் இருவரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்