மாற்றம் ஒன்றே மாறாதது தத்துவத்தில் வெங்கட்பிரபுவுக்கு நம்பிக்கை இல்லை. இவரது முதலிரண்டு படத்தில் நடித்த அதே நடிகர்கள்தான் மூன்றாவது படமான கோவாவில் நடிக்கிறார்கள். ஜெய், பிரேம்ஜி, வைபவ், சிவா... இத்யாதி.
நல்லவேளை நடிகர்கள் விஷயத்தில் மட்டுமே வெங்கட்பிரபு இப்படி. நடிகைகள் ஒவ்வொரு படத்திலும் மாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
கோவாவில் நடிக்கயிருக்கும் வெளிநாட்டு நடிகைகள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. உள்ளூர் நடிகைகளில் சினேகா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
சௌந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோ, வார்னர் பிரதர்ஸுடன் இணைந்து தயாரிக்கும் முதல் படம் இது.