மலை மலை படத்தில் அருண் விஜய் ஜோடியாக நடிக்கிறார் வேதிகா. இதில் அவருக்கு ரேடியோ ஜாக்கி வேடம்.
வேதிகாவுக்கு இதைவிட்டால் வேறு படங்களில்லை. அதனால் மலை மலையில் தனது ஒட்டுமொத்த திறமையையும் காட்ட இருக்கிறார்.
மும்பையில் இருக்கும் அவர், அங்குள்ள ரேடியோ ஜாக்கிகள் சிலரை சந்தித்து அவர்களின் மேனரிசங்களை கற்றுக் கொண்டிருக்கிறார். மேலும், அவர்கள் எப்படி பணிபுரிகிறார்கள் என்பதையும் அருகிலிருந்து பார்த்து படித்திருக்கிறார்.
நடிக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும் வேதிகா கைவசம் ஒரு தொழில் இருக்கிறது, பிழைத்துக் கொள்வார்.